இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார்.
சிம்ம ராசிக்கு, குரு 5வது மற்றும் 8வது வீட்டின் ஆதிபத்தியம் பெற்றவர். 8வது வீடு என்பது ஓரு துர் ஸ்தானமாகும். 8வது வீடு என்பது வாழ்க்கையில் பல வித துன்பங்களையும் குறிக்கும். நோய் படுதலையும் கடன் பட்டு எல்லா வித பிரச்சினைகளையும் சந்திப்பதையும் குறிக்கும். 5வது வீடு என்பது ஓரு நல்ல ஸ்தானமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படும். இது குடும்பத்தில் உள்ள பெரியவர்களையும், பிள்ளைகளையும், யோகத்தையும் மற்றும் மேல்நிலை படிப்பினையும் தெரிவிக்கும்.
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். குருவும் சூரியனும் ஒருவரை ஒருவர் நட்பாகக எண்ணுபவர்கள். ஆகவே குரு எந்த இடத்தில் இருந்து செயல் படுகிறார் என்பது முக்கியம். நல்ல இடத்தில் இருந்தால் குரு நன்மையே செய்வார். துர் ஸ்தானத்தில் குரு இருந்தார் என்றால் நன்மையையும் செய்ய மாட்டார். தீமையும் செய்ய மாட்டார்.
குரு இப்பொழுது மிதுன ராசியில் அமர்ந்து உள்ளார். மிதுன ராசி சிம்ம ராசிகாரர்களுக்கு 11வது ஸ்தானமாகும். 11வது இடம் நல்ல இடமும் இல்லை, தீய இடமும் இல்லை. ஆனால் 11வது இடம் என்பது லாப ஸ்தானம் ஆகும். அதாவது எதையும் பெருக்கும் ஸ்தானம் ஆகும். இங்கு குருவின் 5ம் வீட்டின் நல்லதையும் பெருக்கும். 8வது வீட்டின் கெட்ட பலன்களையும் சேர்த்து பெருக்கும்.
குரு இப்பொழுது பிரவசிக்கும் இடம் மிதுன ராசியாகும். மிதுன ராசி புதனுடைய வீடு ஆகும். குரு புதனை எதிரியாக கருதுபவர்.ஆகவே குரு பகை என்ற நிலையில் பலமற்று மிதுன ராசியில் உள்ளார்.
பலம் இழந்த குரு 8வது வீட்டின் தீய பலனை செய்ய பலம் இன்றி இருப்பது நல்லது என்றாலும், அவரால் 5வது வீட்டின் நல்ல பலனையும் செய்ய பலன் இன்றி இருப்பது சிம்ம ராசிகாரர்களுக்கு சற்றே யோக குறைவு என்றே சொல்ல வேண்டும்.
5வது வீட்டின் அதிபதி என்பதால் சிம்ம ராசிக்கு குரு கண்டிப்பாக கெடுதல் செய்ய மாட்டார். இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.
31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
நீங்கள் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் எல்லா விதமான பிரச்சினைகளும் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். வீட்டு பெரியவர்கள் மற்றும் பிள்ளைகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் உறவுகள் நன்றாகவே இருக்கும். யோகங்கள் சற்று தடை பட்டு பின் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் சற்று கவனத்துடன் செயல் பட வேண்டும்.
08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் கடக ராசி மற்றும் கடக இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.
பிள்ளைகள் மற்றும் பெரியவர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். இல்லை என்றால் மன கசப்பு உண்டாக அதிக வாய்ப்பு உண்டு.நினைத்தது நடப்பதில் கால தாமதம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சற்று ஏமாற்றத்திற்கு உள்ளாக நேரிடும். பூர்விக சொத்து விஷயங்கள் சாதகமாக இருக்காது. ஆனால் எல்லா வித பிரச்சினைகளும் கட்டுக்குள் அடங்கியே இருக்கும்.
02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
பிள்ளைகள் மற்றும் குடும்ப பெரியவர்களின் உறவில் நல்ல முன்னேற்றங்கள் தென்படும். மாணவர்கள் சாதகமான சூழ்நிலையை அனுபவிப்பார்கள். கடைசி நேரத்தில் யோகங்கள் கை கொடுக்கும். சில பிரச்சனைகள் சிம்ம ராசியினரின் கட்டுபாட்டுக்கு வெளியில் சென்று சிரமத்தை கொடுக்க வாய்ப்பு உண்டு.
13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
மீண்டும் குடும்ப பெரியவர்களிடம் மற்றும் பிள்ளைகளிடம் வெறுப்பு அல்லது இடைவெளி உண்டாக கூடும். யோகங்கள் சற்றும் கை கொடுக்காது. மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆழாவர்கள். பூர்வீக சொத்து வகைகள் சற்றே கவலை அளிக்க கூடும். எல்லா பிரச்சினைகளும் சிம்ம ராசியினரின் கட்டு பாட்டுக்குள் இருக்கும்.
30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
உறவுகளில் இருந்து வந்த கசப்புகள் மாறி தெளிவு பிறக்கும். மாணவர்கள் மனதில் இருந்து வந்த தயக்கம் மாறி நம்பிக்கை ஏற்படும். யோகங்கள் சற்று காலம் தள்ளி உதவிக்கு வரும். பூர்வீக சொத்து வகைகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி முன்னேற்ற பாதையில் செல்ல ஆரம்பிப்பார்கள்.
15.08.2013 முதல் 23.09.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
பிள்ளைகள் மற்றும் குடும்ப பெரியவர்களின் உறவுகளில் நல்ல முன்னேற்றம் தென்படும். தாமதித்து நடந்தாலும் யோகங்கள் நல்ல பலனை தரும். மாணவர்கள் தங்கள் உடைய படிப்பில் நல்ல கவனம் செலுத்தி வலுவான அடிப்படையை உருவாக்குவர்கள்.பூர்வீக சொத்து விஷயங்கள் நம்பிக்கை அளிக்கும். சிம்ம ராசியினர் கவனத்துடன் செயல் பட்டால், புதிய பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
23.09.2013 முதல் 08.11.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
சிம்ம ராசியினர் சற்று கவனத்துடன் செயல் பட்டால், குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்து கொள்ளலாம். மாணவர்கள் அதிக கவனத்துடன் செயல் பட்டால் நல்ல பலனை எதிர் பார்க்கலாம். சிம்ம ராசியினர் எல்லா பிரச்சினைகளையும் எளிதாக சமாளிப்பர். விருப்பங்கள் சற்று காலம் தாழ்த்தி நிறைவேறும்.
08.11.2013 முதல் 21.02.2014 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:
குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.
சிம்ம ராசியினரின் கவனத்திற்கு:
1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது.
2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.
3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.
4. சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மோசமான தசையில் இருந்தால் இந்த குரு பெயர்ச்சி சற்று அதிகமான குடும்ப மற்றும் செலவுகளை சந்திக்க நேரும்.
5. சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு குரு கெட்ட ஆதிபத்தியம் ஏற்பட்டு இப்பொழுது குருவின் மஹா தசை நடந்து கொண்டு இருந்தால் சற்றே மோசமான வகையில் பலன்கள் நடை பெரும்
6, சிம்ம ராசியில் பிறந்தவர்கள் 5வது வீட்டின் அதிபதி அல்லது குருவின் திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால், கண்டிப்பாக பிள்ளைகள் வழியாக பிரச்சினைகளை சந்திப்பார்கள்.
7. சிம்ம ராசியில் பிறந்தவர்கள் 5வது அல்லது 9வது வீட்டின் அதிபதி அல்லது சூரிய திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால், கண்டிப்பாக குடும்ப பெரியவர்களால் வழியாக பிரச்சினைகளை சந்திப்பார்கள்.
8. சிம்ம ராசியில் பிறந்தவர்கள் 5வது அல்லது 4வது வீட்டின் அதிபதி அல்லது புதன் திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால், கண்டிப்பாக மாணவர்கள் படிப்பில் பின்னடைவு அடைவார்கள்.
9. சிம்ம ராசியில் பிறந்தவர்கள் 8வது வீட்டின் அதிபதி அல்லது 8வது வீட்டில் இருந்து திசை நடந்து அந்த கிரகம் துர் ஸ்தானத்தில் இருந்தால், தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.
10. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.
11. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.
12. பாக்கிய ஸ்தான அதிபதியான குரு எவ்வளவு கெட்ட இடத்தில இருந்தாலும் குரு பெயர்ச்சியில் சிம்ம ராசி அன்பர்களுக்கு நன்மையே செய்ய முற்படுவார்.முடியாமல் போகும் நிலையில் கூட கெடுதல் செய்ய மாட்டார்.
13. குருவின் பலமற்ற பார்வை 3வது, 5வது மற்றும் 7வது வீட்டில் விழுகின்றது. எந்த நிலையிலும் குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும்.
14. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும்.
குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள்.
Comments
Post a Comment